offer for you

சனி, 25 ஜனவரி, 2025

காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

காஞ்​சிபுரத்​தில் இயங்​கும் தமிழ்​நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி தெரி​வித்​துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதி​யிட்ட இதழில் பொலிவை இழக்​கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்​பில் செய்தி வெளி​யாகி இருந்​தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி அளித்​துள்ள விளக்க கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்​சிபுரத்​தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்​யப்​படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்​கப்​படு​கிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை​யில் ஏற்படும் மாற்​றத்​துக்​கேற்ப விலை நிர்​ணயம் செய்​யப்​பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fZJyHPo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now