offer for you

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறை!

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான முதல் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தின் கடைசி மற்றும் 3-ம் நாளான இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zxe3tEd
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now