offer for you

வியாழன், 10 ஏப்ரல், 2025

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய பங்​குச்​சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான நிதின் காமத் நேற்று கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் சில்​லறை முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து இந்​தி​யப் பங்​கு​களை வாங்கி வந்​தனர். ஆனால் தற்​போது மிகப்​பெரிய அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யப் பங்​குச் சந்​தை​யில் ஏற்​படும் ஒரு பெரிய வீழ்ச்​சி​யானது, சில்​லறை முதலீட்​டாளர்​களை பல ஆண்​டு​களுக்கு பங்​குச் சந்​தைகளி​லிருந்து விலக்கி வைக்​கும்.

2008-ம் ஆண்​டில் பங்​குச் சந்​தை​யின் வீழ்ச்​சிக்கு பிறகு இதே நிலை​மை​தான் ஏற்​பட்​டது. 2008-ல் ஏற்​பட்ட மந்​தநிலை காரண​மாக மிகப்பெரிய அளவில் உலகில் பங்​குச் சந்​தைகள் கடும் சரிவைச் சந்​தித்​தன. அது​போன்று மீண்​டும் நடந்தால் சில்​லறை முதலீட்​டாளர்​கள் பல ஆண்​டு​களுக்கு பங்​குச் சந்​தையி​லிருந்து விலகி வெகு தூரம் சென்​று​விடு​வர். இவ்​வாறு நிதின் காமத் தெரி​வித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PC1f4im
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now