offer for you

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது!

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை இன்று (ஏப்.11) தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது.

3 நாட்களில் ரூ.4,160 உயர்வு: தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்க மக்களை இனி தங்கம் வாங்குவது கனவு தான் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bzBMvyw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now