offer for you

சனி, 12 ஏப்ரல், 2025

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பை தொடர்ந்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை வீடு, வாகன கடன் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்தியன் வங்கி ரெப்போவுடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) 9.05 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y1WrlNc
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now