
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட தங்க நகை கடனுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, சிறுகடன் பெறுவோர் பயன்பெறும் வகையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியுள்ளது.
முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், வங்கிகளில் தங்க நகை கடன் பெறும் விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, கடன் - மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்கநகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RfQACds
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக