
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் கடைகளை வைத்து நடத்துவதற்காக மாநகராட்சி மூலம் வாங்கப்பட்ட ஆயத்த கடைகள் பயன்படுத்தப்பாடமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாநகராட்சி மூலம் சாலையோரத்தில் உடல் ஊனமுற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் போன்றோர் கடை வைப்பதற்கும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் 50 ஆயத்த கடைகள் வாங்கப்பட்டன. தாம்பரம் மாநகராட்சிக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட இந்த கடைகளில் மிகுதியாக இருந்தவை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எடுத்து வரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wKgW5X0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக