offer for you

வியாழன், 16 அக்டோபர், 2025

இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: முந்தைய கணிப்பை விட 0.2% உயர்த்தியது ஐஎம்எப்

புதுடெல்லி: நடப்பு நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்​எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) நடப்பு 2025-26 நிதி​யாண்​டில் 6.4% வளரும் என ஜூலை மாதம் வெளி​யிட்ட உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கை​யில் குறிப்​பிட்​டிருந்​தோம்.

ஆனால், முதல் காலாண்​டில் நிறு​வனங்​களின் லாபம் கணிச​மாக அதி​கரித்​திருந்​தது. 5 காலாண்​டு​களில் இல்​லாத வகை​யில், முதல் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக இருந்​தது. மேலும் உள்​நாட்டு தேவை அதி​கரிப்​பு, அரசின் செல​வினம் அதி​கரிப்பு உள்​ளிட்ட சில காரணங்​களால், இந்​தி​யா​வின் ஜிடிபி நடப்பு நிதி​யாண்​டில் 6.6% ஆக உயரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WrMDL5E
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now