தேசிய பங்குச்சந்தையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகமாகிறது. இதில் சிறந்த பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது சவால் நிறைந்த ஒன்றாகும். புதிதாக பங்குச்சந்தையில் வருபவர்கள் நிப்டி 50 குறியீட்டில் உள்ள இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நன்மை தரும். மேலும், சிறந்த பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis)
ஒரு நிறுவனத்தின் பொருளாதாரம், நிர்வாகம், வணிகம், சேவை,வருமானம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் முறையே அடிப்படை பகுப்பாய்வாகும்.
* ஒரு நிறுவனத்தின் பிராண்ட் (தர அடையாளம்) மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொதுவாக நாம் முதலீடு செய்யும் நிறுவனம் சிறந்த தர அடையாளத்துடன் இருக்க வேண்டும்.
* நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் நிர்வாகம் நேர்மையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும்.
* ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறைந்தபட்சம் 3 ஆண்டு வருமானம் படிப்படியாக உயர்ந்து இருக்க வேண்டும்.
* நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி குறைந்தபட்சம் 3 ஆண்டு படிப்படியாக உயர்ந்து இருக்க வேண்டும்.
* நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்ஸ் பங்கு விகிதம் 50 சதவிகிதத்திற்கு மேல் வைத்து இருக்க வேண்டும்.
* கடன் இல்லாத நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.
Click this link to check fundamental analysis for any stock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக