
பனாஜி: அமெரிக்காவில் உள்ள சாலைகளைக் காட்டிலும், வரும் 2024 முடிவில் இந்திய சாலைகள் தரமானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை கோவாவில் உள்ள ஸூவாரி பாலத்தை திறந்து வைத்தபோது அவர் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு வரும் 2024 இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள சாலைக் கட்டமைப்புகளை விட இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பானதாக இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இதனை அவர் பல்வேறு தருணங்களில் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IufX1Zh
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக