
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறிய சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிவடைந்து 62,756 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 18,588 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் சரிந்து 18,575.35 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறையான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை சற்று சரிவுடனேயே தொடங்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aQCFVkj
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக