offer for you

ஞாயிறு, 16 ஜூலை, 2023

சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் - ரூ.300 கோடி சரக்குகள் தேக்கம் @ ஈரோடு

ஈரோடு: ஈரோட்டில் கூலி உயர்வு கோரி 3-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் பூங்கா சாலை, மூலப்பட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து லாரிகள் மூலம், ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a37qs0o
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now