offer for you

சனி, 3 ஆகஸ்ட், 2024

ஒலிம்பிக்கில் வெல்லும் இந்திய வீரர்களுக்கு எம்ஜி கார் பரிசு

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு எம்ஜி விண்ட்சோர் கார் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கோடீஸ்வரர் சஜ்ஜன் ஜிண்டால் அறிவித்துள்ளார்.

சஜ்ஜன் ஜிண்டால் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். மோரீஸ் கேரேஜ் (எம்ஜி) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து விண்ட்சோர் என்ற புதிய எலெக்ட்ரிக் காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் சஜ்ஜன் ஜிண்டால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AilXWtE
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now