offer for you

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.62,272-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் நேற்று ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக இருந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u179WDS
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now