offer for you

சனி, 28 டிசம்பர், 2024

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்ட மன்மோகன்!

கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்​ம​ராவ் தலைமையிலான மத்திய அமைச்​சர​வையில் நிதி​யமைச்​சராக மன்மோகன் சிங் பணியாற்றினார். அப்போது தாராளமய​மாக்​கத்​தின் மூலமாக நாட்​டின் பொருளாதாரத்தை அவர் வளர்ச்சி பாதை​யில் கொண்டு சென்​றார். எந்த தொழில் செய்​தா​லும் உரிமம்பெற வேண்​டும் என்ற முறையை அவர் குறைத்​தார். விதி​முறைகளை ஒழுங்​குபடுத்தி, தொழில் துறை​யில் அரசு தலையீட்டை குறைத்​தார். இது தொழில்​துறைக்கு உத்வேகம் அளித்​தது.

மேலும் வர்த்தக சீர்​திருத்​தங்களை மன்மோகன் சிங் அறிமுகப்​படுத்​தினார். இறக்​குமதி வரியை குறைத்து, திறந்​தவெளி சந்தை பொருளா​தா​ரத்தை ஏற்படுத்​தினார். நாட்​டின் முக்கிய துறை​களில் அவர் அந்நிய நேரடி முதலீட்டை அனும​தித்​தார். அவர் கொண்டு வந்த சீர்​திருத்​தங்​களால் நாடு தொடர்ந்து பலன் அடைந்து பொருளா​தா​ரத்​தில் முன்னேற்றம் கண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sV1nOdq
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now